V/Nelukkulam Kalaimagal Maha Vidyalayam

Latest News

← Back to News
சாதனையாளர் கெளரவிப்பு

சாதனையாளர் கெளரவிப்பு

Published on Unknown Date

வவுனியா தெற்கு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வுகளின் இறுதிநாள் நிகழ்வுகள் 03.06.2026 அன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது கடந்த வருடம் மாகாண ரீதியில் சாதனைபுரிந்த வீரர்களும் இவ்வருடம் வலயமட்டத்தில் சாதனைபுரிந்த வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர். அந்தவகையில் கடந்த வருடம் இல்லமெய்வல்லுநர் திறனாய்வில் மாகாணமட்டத்தில் முதல் நிலையைப் பெற்றிருந்த எமது பாடசாலை கெளரவிக்கப்பட்டது. 2025ம் ஆண்டு 16 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் 4x100m அஞ்சலோட்டத்தில் 2ம் இடம் 4x400m அஞ்சலோட்டத்தில் 1ம் இடம் பெற்ற மாணவிகள் கெளரவிக்கப்பட்டனர். அத்துடன் 2026 ம் ஆண்டில் 18 வயது பெண்கள் பிரிவில் சிறந்த சுவட்டு வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்ட செல்வி டர்சியா மற்றும் 20 வயது ஆண்கள் பிரிவில் சிறந்த மைதான நிகழ்வு வீரனாக தெரிவுசெய்யப்பட்ட செல்வன் சுபிஸ்கரன் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனர்.